Ad Widget

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் வடமாகாண அளுநரை சந்தித்தார்

வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோன் அடங்கிய குழுவினர் நேற்று வடமாகாண அளுனர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

47292086Swiss

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுனர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்ற மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பிலும் சுவிஸ் தூதுவர் கேட்டறிந்தார்

இதை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கைன்ஸ் வோக்கர் நெடகோன், இறுதி யுத்தத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட்டு அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Related Posts