Ad Widget

இலங்கைக்கான கொரியத் தூதுவர் யாழ். விஜயம்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளார்.

vicky-koreya

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கொரியத் தூதுவர், முதலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

‘வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மக்களின் தொழில் வளங்களை மேம்படுத்தவும் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் கொரிய அரசாங்கம் உதவவுள்ளது.

மேலும், வடமாகாணத்திலுள்ள மாணவர்கள் மேற்படிப்புக்காக கொரிய நாட்டிற்கு வருகை தருவதில்லை எனவும் இனிவரும் காலங்களில் வடமாகாண மாணவர்கள் கொரிய நாட்டில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் வடமாகாண இளைஞர்கள் கொரிய மொழியை கற்றுக்கொண்டால் கொரியாவில் வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்ததாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கொரியத் தூதுவர், வைத்தியசாலையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டித்தொகுதியை பார்வையிட்டுள்ளார்.

Related Posts