Ad Widget

இருமல் மருந்தில் விஷத்தன்மையால் 400 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், 2006–ம் ஆண்டு, நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை குடித்து ஏராளமானோர் பலியாகினர். இதில் 400 பேர் பலியானதாக அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், பல்வேறு அமைப்புகள் சுமார் 10 ஆயிரம் பேர் பலியானதாக கூறின.

இந்த இருமல் மருந்துக்கான டி.டி.கிளிசரின் என்ற மூலப்பொருளை சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஸ்பானிய நிறுவனம் பெற்றிருந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து மூலப்பொருளை பனாமாவில் உள்ள மெடிக்காம் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது.

அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இருமல் டானிக்கை குடித்த மக்கள் பெருவாரியாக பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்த மருந்தினை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியபோது, அதன் மூல மருந்தில், டைத்தேலின் கிளைக்கோல் என்ற விஷப்பொருள் பெருமளவு அடங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக பனாமா, ஸ்பெயின், சீனா என 3 நாடுகளில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் முதலில் 26 பேர் மீது விசாரணை நடத்தி, 11 பேர் மீது வழக்கு போட்டனர். இதில் 5 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து பனாமா மருந்து கம்பெனியின் பிரதிநிதி ஏஞ்சல் ஏரியல் டி லா குரூசுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், 4 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Posts