Ad Widget

இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா

மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் சேர்.பொன் இராமநாதன் அரங்கில் கல்லூரி அதிபர் கமலராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது. தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

sir-pon-ramanathan

நேற்றய நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவும், கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி ரங்கநாயகி பத்மநாதனும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு பெருமைகள் கூறும் நூற்றாண்டு மலரும் பிரதம விருந்தினரால் வெளியிடப்பட்டது. அத்துடன் கல்லூரி மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இராமநாதன் மகளிர் கல்லூரி 1913ஆம் ஆண்டு சேர்.பொன் இராமநாதனால் உருவாக்கப்பட்ட பெண்கள் பாடசாலையாகும். வலிகாமம் கல்வி வலயத்திற்குள் அமைந்திருக்கும் இப்பாடசாலை தமிழ் இந்து கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் பாடசாலையாக இராமநாதனால் உருவாக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியினையடுத்து பரவலாக பல இந்து கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இருந்தும் அவை ஆண்கள் பாடசாலையாகவிருந்தமையினால், பெண்களுக்கென சைவப் பாடசாலையொன்று இல்லாமலிருந்தமையினால் அதனை மாற்றும் முகமாக இராமநாதனால் இப்பாடசாலை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts