இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்

கீரிமலை பகுதியில் திங்கட்கிழமை (02) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெல்லிப்பளையைச் சேர்ந்த கதிரவேலு கமலநாதன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தார்.

காங்கேசன்துறை பெண்கள் படையணியின் வாகனம் மோதியதிலேயே முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts