இராணுவ வாகனம் மோதியதில் வயோதிபப் பெண் படுகாயம்!

எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று மாலை இராணுவ வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் 60 வயதான சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts