Ad Widget

இராணுவமயமாகின்றன பல்கலைக்கழகங்கள் என்ன விலைகொடுத்தும் தடுத்து நிறுத்துவோம்; தேசிய மாணவர் ஒன்றியச் செயலாளர்

பல்கலைக்கழகங்களின் இராணுவ மயமாக்கலைத் தடுத்து நிறுத்த என்ன விலை கொடுக்கவேனும் தயாராக உள்ளோம். யாழ். பல்கலையில் அத்துமீறி செயற்பட்ட இராணுவத்தைக் கண்டித்தும் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தேசிய மாணவர் ஒன்றியம் நடத்திய துண்டுப் பிரசுரப் போராட்டத்தின் போது அதன் செயலாளர் அசங்கபுளேகொட தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தேசிய மாணவர் ஒன்றியச் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த அரசு பல்கலைக்கழகங்களை இராணுவ மயப்படுத்த முயற்சிக்கின்றது.
மாணவர்களுக்கு எதிராக பொலிஸார், இராணுவத்தினர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுகளை ஏவி அவர்களைத் துன்புறுத்துகிறது. இதை அரசு உடன் நிறுத்த வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை அரசு பாதுகாப்பு அமைச்சின் கீழ்க் கொண்டுவந்து அதற்குக் கீழுள்ள “ரட்ணா லங்கா’ தனியார் பாதுகாப்புப் பிரிவிடம் பல்கலைப் பாதுகாப்பைக் கையளித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் விளைவையே தற்போது இங்கு பயிலும் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள். இதன் ஒருபகுதியாகவே யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் அத்துமீறிப் புகுந்துள்ளது.

எனவே மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம்.இதன் முதற்கட்டமாகவே இன்றைய போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் இது தொடரும் என்றார்.

Related Posts