Ad Widget

இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெடிபொருட்களின் சிதைவுகள் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் வந்து வீழ்வதாகவும், அதனால் தமக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு செயலிழக்க செய்யும் வெடி பொருட்களை மக்கள் குடியிருப்புக்களிற்கு அருகில் மேற்கொள்ளாது, பொருத்தமான பகுதிகளிற்கு மாற்ற வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts