Ad Widget

இரண்டு பாடசாலைகளில் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றன.
.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

அவருடன் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, கல்வி அமைச்சின் செயலர் சத்தியசீலன், வலையக் கல்விப் பணிப்பாளர்கள் , அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆய்வுகூடங்கள் கட்டப்பட்டன. அதற்கமைய அவை இன்று வைபவ ரீதியாக நாடா வெட்டித்திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில்
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில்
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில்

Related Posts