Ad Widget

இரட்டைக் குடியுரிமை; இனிமேல் புதிய நடைமுறை கோத்தபாய அறிவிப்பு

Defence-Secretary-Gotabayaவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க, இந்த ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இரட்டைக் குடியுரிமை யைப் பெறவிரும்புவோர் இதுதொடர்பில் விசாரணை செய்யும் இடத்துக்கு நேரில் வருகைதர வேண்டும்.

அந்த விசாரணையின் போது இரட்டைக் குடியுரிமையைப் பெறவிரும்புவோரின் தனிப்பட்ட விவரங்கள், அவர்களது பின்னணி போன்றன முற்றுமுழுதாக ஆராயப் படும்.

இதற்கு முன்னர் இரட்டைக் குடியுரிமை பெறும் போது அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.

கூடுதலான இலங்கையர்கள் 1980 ஆம் ஆண்டுகளில் கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இலங்கையில் வாழமுடியாது என்று கூறியே இவ்வாறான நாடுகளுக்குச் சென்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்களின் அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த நாடுகளின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் தொடர்புடைய, இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள ஈழ ஆதரவாளர்கள் அனைத்துலக மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான காரணங்களைக் கருத்தில் கொண்டு இரட்டை குடியுரிமையைப் பெறுவதற்கான பழைய நடை முறைகள் நீக்கப்பட்டு, புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படவுள்ளன.

இதுதொடர்பில் புதிய சட்டவரைவு ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts