Ad Widget

இபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

இபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10000தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

????? ?????????? ?????? 1000 ???? ??????? ???????????????
????? ?????????? ?????? 1000 ???? ??????? ???????????????

இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகமாக இருக்கலாம் என்று அது கூறுகிறது.
காரணம் நோய்ப் பாதிப்ப உடையவர்களை அவருடைய குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல் வீடுகளிலேயே வைத்திருப்பார்களேயானால், அந்த எண்ணிக்கைகள் எல்லாம் இதில் சேராது என்று அது குறிப்பிடுகிறது.

மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மருத்துவமனைகள் ஏற்கனவே இபோலா நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் அது தெரிவிக்கிறது.

இபோலாவால் இதுவரையில் மொத்தம் 4922 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்த உயிரிழப்புகளில் 10ஐத் தவிர மற்றவை அனைத்தும் இபோலாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளான சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் கினீயில் நிகழ்ந்துள்ளன.

இந்த மூன்று நாடுகளுக்கு வெளியில் இபோலா வந்ததாக உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 27தான்.

இபோலாவாவல் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் தற்போது மாலியும் சேர்ந்துள்ளது.

மாலியில் இபோலா வந்ததாக அறியப்பட்ட முதல் நபரான இரண்டு வயது குழந்தையொன்று இறந்துவிட்டதை மாலியின் எர் எஃப் இ வானொலி அறிவித்துள்ளது.

இந்தப் பிள்ளையோடு தொடர்பில் வர நேர்ந்திருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நீடித்துவருகின்றன.

இந்தக் குழந்தையின் உயிரிழப்பை அடுத்து அந்நாட்டில் பரவியுள்ள பீதியைத் தணிக்க இயன்ற அனைத்தையும் செய்வதாக அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார்.

அதேபோல மேற்கு ஆப்பிரிக்கவில் இபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவிவிட்டு நாடு திரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் அனைவரும் 21 நாட்கள் தனிமைப் படுத்தி வைக்கப்பட வேண்டும் என நியூயார்க் மற்றும் நியுஜெர்ஸி மாகாணங்களுக்கான ஆளுநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கினீயிலிருந்து நியூயார்க் திரும்பியிருந்த மருத்துவர் கிரெய்க் ஸ்பென்சருக்கு இபோலா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தேச மக்களுக்கான தனது வாராந்த உரையில் இபோலாவை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஏழு பேருக்கு இபோலா வந்திருந்தாலும், அவர்களில அனைவருமே நோயிலிருந்து மீண்டுவிட்டார்கள் எனவே முறையான மருத்துவ நடவடிக்கைகள், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலமாக இபோலாவை வெல்ல முடியும் என ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

Related Posts