Ad Widget

இன்சுலின் மருந்து விற்பனையில் மோசடி!

pills-medicenயாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள மருந்தகங்களில் காலம் முடிவடைந்த இன்சுலின் மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுவதுடன் வைத்தியசாலை வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

அளவெட்டியைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இவருக்கு உடனடியாக இன்சுலின் ஏற்ற வேண்டிய நிலை காணப்பட்டமையால் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள மருந்தகத்திறக்கு சென்று இன்சுலினை பெற்று வந்துள்ளார்.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் அதனை ஒப்படைத்த வேளையில் வைத்தியர் பாவனைக்கான திகதியை பார்த்த வேளையில் குறிப்பிட்ட இன்சுலின் மருந்தின் காலம்முடிவடைந்து இருப்பதை கண்டு பிடித்துள்ளதுடன் சுகாதார வைத்தியதிகாரிக்கு உடன் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் நீரிழிவு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளிலும் கூட நீரிழிவு நோய்கான மருந்துகளுக்க அடிக்கடி தட்டுப்பாடுகளும் எற்படும் நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தும் மருந்தக உரிமையாளர்கள் காலம் கடந்த மருந்துகளையும் விற்பனை செய்யும் நிலமை காணப்படுகின்றது.

இதனால் மக்கள் மருந்தகங்களில் மருந்துப்பொருட்களை வாங்கும் போது முடிவு திகதியை பார்த்து வாங்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.

Related Posts