Ad Widget

இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டுகிறதாம் கூட்டமைப்பு! – சுமந்திரன்

இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சர்வதேச ஈடுபாட்டோடு நீதிமன்றப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது. அதில் வேறு பல குற்றங்களுக்கான சாட்சியங்கள் முன்வைக்கப்படும். அதேவேளை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்களும் வரும். அதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு, பொறிமுறை முன்னெடுக்கப்படுகின்றபோது இனப்படுகொலைக்கான வரைவிலக்கணத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஆதாரங்களைப் போர்க்குற்ற நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். பற்றாக்குறையான சாட்சியங்களும் சேகரிக்கப்பட்டு அந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts