Ad Widget

இந்த வாரத்துள் 3000 ஏக்கர் விடுவிப்பு

வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கு முதல் உத்தியோக பூர்வ பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக விடுவிக்கப்படும் கானிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எந்தப் பகுதிகளை முதலில் விடுவிப்பது என்ற விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 3000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts