Ad Widget

இந்திய வீட்டுத்திட்டம், சண்டிலிப்பாயில் 501 வீடுகள்

india_houseசண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கான உதவிகளை 501 குடும்பங்கள் பெற்றுள்ளனர்.

இவர்களில் 176 குடும்பங்கள் வீடுகளை முழுமையாக கட்டி முடித்துள்ளதாக அப்பிரதேச செயலர் சுப்பிரமணியம் முரளிதரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தார்.

இந்த வீட்டுத்திட்டத்திற்காக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் மற்றும் அதிக அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என்ற அடிப்படையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயனாளிகள் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள 8 கிராம அலுவலர்கள் பிரிவில் இந்த வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றன.

மாதகல் கிழக்கில் 108 குடும்பங்களும் மாதகல் மேற்கில் 181 குடும்பங்களும் மாரீசன் கூடலில் 38 குடும்பங்களும் சாவற்கட்டில் 34 குடும்பங்களும் உயரப்புலத்தில் 14 குடும்பங்களும் ஆனைக்கோட்டையில் 32 குடும்பங்களும் பண்டத்தரிப்பில் 38 குடும்பங்களும் பெரிய விளானில் 56 குடும்பங்களும் இந்த வீட்டுத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு, வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு வீடு அமைப்பதற்கு 550,000 ரூபா நிதி வழங்கப்பட்டது. இருப்பினும், பயனாளிகள் மேலதிக நிதியை இட்டு சுமார் 900,000 ரூபா செலவில் வீடுகளை அமைத்து வருகின்றனர்.

மிகுதி வீடுகள் அமைக்கும் பணிகளும் வெகு விரைவில் முடிவடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts