Ad Widget

இந்திய மீனவர்கள் 40பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 40பேர், நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே அம்மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 26 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 மீனவர்கபளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

Related Posts