Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் யாழில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி, மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரையும் கையளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்வதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இவை குறித்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்கப்படுத்தல் தடைச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts