இந்திய உயர்மட்ட குழு யாழ் வருகை

indianflagஏழு பேர் கொண்ட இந்திய குழுவொன்று இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த குழுவினர் இன்று காலை 11மணியளவில் இந்திய தூதரக அலுவலகத்தில் இந்திய துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்தை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழிற்கு வருகை தந்த குழுவில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா மேத்தா, இந்திய வெளி விவகார அமைச்சின் மேலதிக செயலாளரின் நிதி ஆலோசகர் பினய் குமார், இந்திய வெளிவிவகார அமைச்சின் இயக்குனர் அனுராக் சிறிவஸ்ரவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கீழ் செயலாளர். ஜோன் மாய், இந்திய சிவில் பொறியியல் ஆலோசகர் மன்மோகன் வர்மா,அகமதாபாத் கட்டட ஆலோசகர் சா கீர்த்தி நட்வர்லால் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் மோகன் ஆகியோர் அடங்குகின்றனர்.

மேலும் இந்த உயர்மட்ட குழு இன்று கோப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளது.நாளை வவுனியா, புதுக்குளம் ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts