இந்தியா – இலங்கைக்கு இடையில் சீபாவும் இல்லை பாலமும் இல்லை

இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப் போவதாக பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன, எனினும் அது நடக்கப் போவதில்லை என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் சீபா ஒப்பந்தம் கையெழுத்திடப் போவதில்லை எனவும், பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தமே கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts