யுத்தக்காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற வடக்கைச்சேர்ந்த 13 குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 17 ஆண்களும், எட்டு பெண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், நாடு திரும்புவதற்கு சர்வதேச அகதிகள் அமைப்பு உதவியளித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை நாடுதிரும்பியுள்ளனர்.