Ad Widget

இந்தியாவிலிருந்து வேதாள விதை வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை

onion2யாழ் மாவட்டத்தில் வேதாள விதை வெங்காயத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் நன்மை கருதி வேதாள விதை வெங்காயத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த காலத்தில் பருவம் தப்பி பெய்த மழை மற்றும் காலநிலை மாற்றம் என்பவைகளினால் வடமராட்சியில் செய்கை பண்ணப்படும் வேதாள விதை வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேதாள விதை வெங்காயத்தின் விலையும் தற்போது மிகவும் உயர்ந்து 50 கிலோ விதை வெங்காயம் ஏழாயிரம் ரூபாவையும் கடந்து சென்றுள்ளது.

இதனால் வேதாள வெங்காயச் செய்கையாளர்கள் வேதாள வெங்காய செய்கையை கைவிடும் நிலையில் உள்ளாக்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வேதாள விதை வெங்காயத்தை இறக்குமதி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயத் திணைக்களம் மேற்க்கொண்டுள்ளது.

தற்போது முதல் கட்டமாக வேதாள விதை வெங்காயம் தேவைப்படுபவர்களின் பெயர் பட்டியல்கள் பிரதே விவசாய சம்மேளனங்கள் மூலம் விவசாய போதனாசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Related Posts