Ad Widget

இடைக்கால நிர்வாக சபையை இந்தியா உருவாக்க வேண்டும்: – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Kajentherakumarஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை இந்தியா முன்னின்று உருவாக்கவேண்டும் இவ்வாறு உருவாக்கப்பட்ட பின்னரே இறுதித் தீர்வு குறித்து தீர்மானிக்க முடியும் என்று இந்திய நாடாளுமன்ற குழவினரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்களை இல்லாதொழிலக்கும் நடவடிக்கை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது இதனை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்திய பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. உயிர் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இங்கு இன அழிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பும் இந்தியாவிற்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் மாகாண சபை முறை போன்றவற்றையே இந்தியா வலியுறுத்தி வருகின்றது இந்த 13 ஆவது திருத்தம் வெறும் ஏமாற்றத்தைக்கொடுக்கும் விடயமே தவிர அதனை ஒரு தீர்வாக எடுத்துக்கொள்ளள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசின் இவ்வாறான இன அழிப்பை தடுக்கவேண்டும் என்றால் இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற் ஒரு நிலை மாற்று நிர்வாகம் ( இடைக்கால நிர்வாகம்) உருவாகவேண்டும். அதனை இந்தியா முன்னின்று இதனை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் முன்வைத்த இந்த கோரிக்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வடக்கு கிழக்கை இணைக்கவும்: இந்திய எம்.பிக்களிடம் தமிழ்க்கட்சிகள்

Related Posts