Ad Widget

இடமாற்ற சபையினால் இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்: ஜோஸப் ஸ்டாலின்

Joshep-starlin2ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடமாற்ற சபையினால் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில், முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் இடமாற்ற சபையின் அனுமதியின்றி ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2007/20 ஆம் சுற்றறிக்கையின் பிரகாரம் இடமாற்ற சபையினால் ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இடமாற்ற சபையினால் இடமாற்றங்கள் வழங்காது, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் வலயங்களில் பாடசாலை அதிபர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு பாடசாலை அதிபர்களினால் வழங்கப்படும் இடமாற்றத்தினை ரத்துசெய்து, இடமாற்ற சபையினால் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கல்வி அமைச்சரின் பதில் கிடைக்கவில்லை.

பாடசாலை அதிபர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதால் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

எனவே பாடசாலை அதிபர்கள் தன்னிச்சையாக ஆசிரியர்களுக்கு வழங்கும் இடமாற்றத்தினை நிறுத்தி, ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இடமாற்ற சபையினால் இடமாற்றங்கள் வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts