Ad Widget

ஆஸி உயர்ஸ்தானிகர் உதவித் தேர்தல் ஆணையாளர், அரச அதிபருடன் சந்திப்பு

DSCF0462யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண தேர்தல் குறித்து ஆராய்ந்துள்ளார்.

யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருடன் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் வடக்கு தேர்தல் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட செயலகத்தில் உள்ள அரச அதிபரின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அச்சந்திப்பின் போது, நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலின் சூழ்நிலைகளை ஆராயும் நோக்கத்திற்காகவே தான் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாகாண சபை தேர்தலுக்கான சூழ்நிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்றும் அவர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கையில், மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன், இருப்பதுடன், தேர்தல் சூழ்நிலைகள் சுமூகமான நிலையில் இருப்பதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வன்முறைச் சம்பவங்கள் குறைவாக காணப்படுகின்றதாகவும், வாக்களிப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன், இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜக்கிய தேசிய கட்சியின் வடமாகாண சபைக்கான முதன்மை வேட்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Related Posts