Ad Widget

ஆவா குழுவின் தலைவன் பிணையில் விடுதலை!

ஆவா எனப்படும் குழுவின் தலைவனான வினோதன் என்பவர் யாழ். மேல் நீதிமன்றினால் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கண்ணகி அம்மன் கோவிலடி இணுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் கடந்த தை மாதம் 4 ஆம் திகதி கோப்பாய் பொலிஸார் ஆவா உட்பட மேலும் 11 பேரை கைது செய்து ஆவா குறுப் அங்கத்தவர்கள் என்றும், யாழில் இடம்பெற்ற பல்வேறு கொலை கொள்ளை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என கூறி 12 பேரும் யாழ். நீதிவான் நீதிமன்றில் 3 வழக்குளில் பதிவு செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்க்பபட்டிருந்தனர்.

இதில் ஒருவர் ஓரிரு நாட்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், 10 பேரும் ஒரு மாத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் ஆவா மட்டும் பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தமைக்கான காரணம் ஆவாவினால் குற்றம் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும், இச் சட்டத்தின் படி நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுதலை செய்ய முடியாது மேல் நீதிமன்றமே விடுதலை செய்ய முடியுமென கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த பங்குனி மாதம் 31 ஆம் திகதி ஆவா விடுதலை பிணை விண்ணப்பம் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸார் தமது அறிக்கையல், ஆவாவிடம் வீட்டின் பின்பக்க வாழைத்தோட்டத்தில் இரண்டு கைக்குண்டுகளும் வாள்களும் கண்டு பிடிக்கப்பட்டதென குறிப்பிட்டிருந்தனர்.

ஆவாவின் குற்றச் செயல்கள் மேலொட்டமான கருத்து என்றும் பொலிஸாரிடமும் எந்தவித சான்றுகளும் காணப்படாத பட்சத்தில் 50 ஆயிரம் காசு பிணையிலும், 1 லட்சம் 3 ஆள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், மற்றைய 11 நபர்களுடனும் எக்காரணம் கொண்டு எந்த உறவோ, தொடர்பு வைத்திருக்க கூடாதென்றும், ஒவ்வொரு நாளும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் கையொப்பமிடவேண்டும் நீதிமன்றின் அனுமதியின்றி வெளிநாட்டிற்கு செல்ல முடியாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிக்குள் செல்லக்கூடாதென்றும், கோப்பாய் பிரதேச செயலருக்கும், அவதானிக்கும் முகமாக கிராம சேவகர்களுக்கு கட்டளை அனுப்பி வைக்கப்படுகின்றதென்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts