Ad Widget

ஆனையிறவில் புகையிரத நிலையத்திற்கான அடிக்கல் நாட்டல்

rain-stationயாழ். ஆனையிறவு பிரதேசத்தில் முதற் தடவையாக புகையிர நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென் மாகாண மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் வடக்குத் தெற்கு ‘அன்பின் சங்ககமம் ஆனையிறவு புகையிரத நிலையம்’ எனும் தொனிப்பொருளில் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, பிரதி போக்குவரத்து அமைச்சர் ரேஹன திசாநாயக்க, ஆளுநர்களான நந்தா மெதியூ, ஜி.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, வவுனியா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தென் மாகாணத்தில் இருந்து வருகை தந்த மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தென் மாகாணத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் 22 மில்லியன் ரூபா நிதியில் இந்த புதிய புகையிரதம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

23 வருடங்களின் பின் ஆனையிறவில் புதிய ரயில் நிலையம்

Related Posts