Ad Widget

ஆசிரிய கலாசாலையின் பயிற்சி வகுப்புக்கள் நிறைவு

graduationகோப்பாய் ஆசிரிய கலாசாலையில் புதிதாக அனுமதி பெற்றுள்ள 591 மாணவர்களுக்கு இரு வாரங்களாக நடைபெற்று வந்த திசைமுகப்படுத்தல் பயிற்சி வகுப்புக்கள் நாளை திங்கட்கிழமையுடன் (28) நிறைவடைகின்றன.

ஆசிரிய பயிற்சியை வழங்குவதற்கேற்ற வகையில் ஆசிரிய மாணவர்களைத் தயாராக்கும் நோக்குடன் இரு வாரங்களுக்கு இப்பயிற்சி இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தின் துறைசார்ந்த வளவாளர்கள் சேவை அடிப்படையில் இதில் பங்கேற்று கருத்துரைகளை வழங்கி வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியற்றுறை பேராசிரியர் மா.சின்னத்தம்பி, மூத்த விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி, வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதி தி.வேல்நம்பி, சத்திரசிகிச்சை நிபுணர் வெ.சுதர்சன், உளமருத்துவ நிபுணர் எஸ்.சிவயோகன், சட்டமருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.சிவரூபன், மருத்துவபீடப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, சின்மயமிசன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்கிரத் சைதன்யர், முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசன், புனித வளனார் குருத்துவக் கல்லூரி அதிபர் செ.அன்புராசா அடிகள், கொழும்பு பங்குப் பரிவர்தனை முகாமையாளர் மு.திலீபன், சட்டவாளர் ஜொனி மதுரநாயகம், சூழலியலாளர் எஸ்.அசோகன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கி வருகின்றனர்.

இவர்களுடன் கலாசாலை விரிவுரையாளர்களும் இணைந்து வெவ்வேறு தலைப்புக்களில் இப்பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். மாலையில் விளையாட்டுச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts