Ad Widget

ஆசியாவில் மிகமோசமான விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும்!

ஆசியாவில் மிகவும் திறமையற்ற விமான நிலையங்களில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடங்குகிறது என்று விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனம் தனது தரப்படுத்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

air-port

உலகம் முழுவதும் உள்ள வர்த்தக – சர்வதேச விமான நிலையங்களை தரப்படுத்தி வெளியிடப்பட்ட அந்த அமைப்பின் அறிக்கையில் 200 விமான நிலையங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 12 ஆவது வருடமாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

தவிர வட அமெரிக்காவின் சர்லோட், ஒக்லஹோமா, வன்கூவர் விமான நிலையங்கள் முன்னிலை வகிக்கின்றன.

ஐரோப்பாவில் கோப்பன்ஹேகன் விமான நிலையமும் ஆசியாவில் தென்கொரிய விமான நிலையமும் முன்னிலை வகிக்கின்றன.

ஆசியாவின் திறமையற்ற விமான நிலையங்களாக ஜப்பானின் ஹன்சாய் விமான நிலையம் நகோயா விமான நிலையம், இலங்கையின் பண்டாரநாயக்க விமான நிலையம் ஆகியன மதிப்பிடப்பட்டுள்ளன.

Related Posts