Ad Widget

ஆக்கபூர்வமான சர்வதேச பொறிமுறை வேண்டும் – கஜேந்திரகுமார்

Kajentherakumarசர்வதேச சமூகம் நேரடியாக தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் ஆக்கபூர்வமான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வேண்டும். அதை செய்யாவிடின், சர்வதேச சமூகமும் இவ்வகையான செயற்பாடுகளுக்கு துணைபோவதாக தமிழ் மக்கள் கருதவேண்டி வரும் என்று தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் சனிக்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சர்வதேச சமூகம் நேரடியாக தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் ஆக்கபூர்வமான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வேண்டும்.

அதை செய்யாவிடின், சர்வதேச சமூகமும் இவ்வகையான செயற்பாடுகளுக்கு துணைபோவதாக தமிழ் மக்கள் கருதவேண்டி வரும்.

‘வலி.வடக்கு ஆர்ப்பாட்டத்தில் மக்களை கலந்து கொள்ளக் கூடாதென இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், நலன்புரி முகாம்களின் தலைவர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர். இன்று தமிழர் தாயகத்தில் இருக்க கூடிய நிலைமை இதுதான். ஜனநாயக ரீதியாக எந்தவித வன்செயலுமில்லாது. எமது பிரச்சினைகளை கூறுவதற்கு அகிம்சை வழியிலான போராட்டத்தினை முன்னெடுத்தாலும், அந்த குரலை நசுக்கும் நிலைமை தான் இன்று இங்கு இருக்கின்றது.

இப்படியான ஒரு சூழலில் தான் எதிர்வரும் மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை குறித்து விவாதிக்க இருக்கின்றது. வெறுமனவே மனித உரிமைகள் மீறல் அல்ல. ஒரு தேசத்தின் இருப்பு அழிக்கப்படுகின்றபொழுது அந்த தேசத்தின் நியாயத்தினை சுட்டிக் காட்டும் ஒவ்வொரு பொழுதும் அந்த குரலை நசுக்குவது, அந்த தேசத்தின் இருப்பை நசுக்குவதற்குச் சமன். அந்த பின்னணியைச் சரியாக விளங்கிக் கொண்டு சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான நிலையை முன்வைக்க வேண்டும்.

இதை உணர்ந்து, சர்வதேச சமூகம் நேரடியாக தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில், ஆக்க பூர்வமான சர்வதேச பொறிமுறையினை உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அபிவிருத்தி அரசியல் தீர்வுக்கு ஈடாகாது – விவசாய அமைச்சர்

கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி இடம்பெற்றுள்ளது

Related Posts