Ad Widget

அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது .

வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில் எதுவும் நடைபெறாததது போல நடைபெற்று முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அவைத்தலைவர் மாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் அதுபற்றியும் எதிர்க்கட்சிகளோ ஆளுங்கட்சிகளோ எதுவும் வாய்திறந்திருக்கவில்லை

அவையில் சில முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்திருந்தது. முன்னாள் அமைச்சர்களின் இருக்கைகள் மாற்றப்பட்டிருந்தன முதலமைச்சருக்கு பக்கத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் முதலமைச்சரும் அமைச்சரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவைத்தலைவருடனும் முதலமைச்சர் பேசிக்கொள்ளவில்லை. அத்துடன் வழமையாக அவைத்தலைவர் அறையில் ஓய்வெடுக்கும் முதல்வர் இன்று அங்கு செல்லவில்லை என்றும் தனக்கு வேறு அறை ஒதுக்குமாறு உத்தரவிட்டு சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இது முதலமைச்சர் அவைத்தலைவருடன் இன்னமும் கோபமாக உள்ளதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மற்ற இரு அமைச்சர்களுக்கான  விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும் விலகிய அமைச்சர்களுக்கான மாற்றீடுகளுக்கு உறுப்பினர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அவையில் அறிவித்தார்.

சர்ச்சைகளின் போது கடந்தவாரம் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் முதலமைச்சர் பதவி்க்காக தமிழரசு கட்சியினால் பிரேரிக்கப்பட்டிருந்தமையும் அவைத்தலைவரால் 21 உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆளுனரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு கடும் மக்கள் போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களினால் அது மீளப்பெறப்பட்டமையும் யாவரும் அறிந்ததே.

Related Posts