Ad Widget

அரிசியின் விலையில் மேலும் அதிகரிப்பு?

வரவு செலவு திட்டத்தில் நெல் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாக அதிகரித்தமையால் அரிசி விலை குறைக்கப்படும் என எதிர் பார்த்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

எப்படியிருப்பினும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பினால் வாடி க்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

புதிய விலையின் கீழ் கடைகளில் நாட்டு அரிசி ஒரு கிலோ 85 ரூபாயாகவும், சம்பா அரிசி அதற்கு அதிகமாகவும் விற்பனை செய் யப்படுகின்றது என பொலநறுவை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் செய லாளர் ரொஷான் டி சில்வா தெரிவித்தார்.

தேசிய அரிசி விலை அதிகரிக்கப்பட்ட தனால் குறைந்த விலைக்கு வெளிநாட்டு அரிசி கடைகளில் கொள்வனவு செய்யப்படுகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறு வெளிநாட்டு அரிசி கடைகளுக்கு தொடர்ந்து கொண்டுவரப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட விலை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்ற நிவாரணம் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் கீழ் வெளிநாட்டு அரிசி வகைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கு மேலதிகமாக வரவு செலவு திட்டத்தில் உருளைக்கிழங்கு, தேயிலை, இறப்பர், மற்றும் பால் உள்ளிட்ட விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திகளுக்கு நிர்ண யிக்கப்பட்ட விலை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையினை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்து வதற்கு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts