Ad Widget

அரசு போர்க் குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு அச்சம் ஏன்? – முதலமைச்சர்

vicky0vickneswaranவடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும் எனவும் கேள்வியயழுப்பியுள்ளார்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வடக்கு மாகாண சபையில் கடந்த திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், “த இந்து’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் இலங்கை அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின், அவர்கள் ஏன் சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றனர். இந்த விடயம் சர்வதேச விசாரணை அடிப்படையிலேயே பேசப்படவேண்டும்.

சொந்தங்களை இழந்த மக்களுக்கே அதன் வலி தெரியும். யாரேனும் உயிரிழந்தால் அதற்கான காரணங்களை அறியமுடியும். ஆனால் காணமற்போனவர்கள் தொடர்பில் எதுவுமே அறிய முடியாமல் இருப்பது துன்பகரமானது என்று முதலமைச்சர் நேர்காணலில் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி

“இன ஒழிப்பு” சொற்பதம் வேண்டாம் – முதமைச்சர்

Related Posts