Ad Widget

அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உள்ளீடுகள்

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டத்தின்கீழ் யாழ்.மாவட்ட பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பா.டெனிஸ்வரன் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.

tamil-refuse

இந்த திட்டமானது வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் விசேட வாழ்வாதார திட்டத்தின் கீழ் இதுவரை வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் கீழ் யாழ். மாவட்டத்தில் 43 பயனாளிகள் உள்வாங்கப்பட்டனர்.

நிகழ்வில் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கிவைத்தனர்.

Related Posts