Ad Widget

அரசியலுக்குள் பலியாகமாட்டேன் – சிறிதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம் ஊடாக சிறிதரன் எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 2,000 ரூபாய் பெறுமதியான போஷாக்குப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் சற்றுமுன்னர் நடைபெற்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இருப்பினும், அந்நிகழ்வில், சிறிதரன் எம்.பி கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கூறிய அவர், ‘பிரதமர் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்வுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் நானும் அந்நிகழ்வுகளுக்கு செல்லவில்லை’ என்றார்.

Related Posts