Ad Widget

அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளை சிலர் சுயநல அரசியலுக்காக விமர்சிக்கின்றனர்: அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா

daklasஅரசாங்கம் செய்யும் அபிவிருத்திப் பணிகளை சிலர் தங்கள் சுய நல அரசியலுக்காக விமர்சித்து வருகின்றனர்’ என்று பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நான்காவது சர்தேச கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்று யாழில் நடைபெறும் இந்த கண்காட்சி, வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. கடந்த காலத்தில் விமானத்தில் வந்து கண்காட்சிகளில் கலந்துகொண்டவர்கள் இப்போது தரைவழியாக வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை வடக்கின் அபிவிருத்தியை எடுத்துக்காட்டுகின்றது. இதற்காக ஜனாதிபதிக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன் இவ்வாண்டு யாழ்ப்பாணத்திற்கு புகையிரதம் வரும் என்று இந்தியத் தூதுவர் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இதேபோன்று இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுவேலி தொழிற்பேட்டையும் இவ்வருடம் செயற்படத் தொடங்கும்.

இவ்வாறான அபிவிருத்தி மாற்றங்களை சிலர் தங்கள் சுய அரசியல் இலாபங்களுக்காக விமர்சித்து வருகின்றார்கள்’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts