Ad Widget

அம்பனில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை நிறுத்தக்கோரி மகஜர்

வடமராட்சி அம்பன் பகுதியில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் யாழ். அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

மக்கள் குடியிருப்புக்கு அருகில் சட்டவிரோத மணல் அகழ்வினால் அப்பகுதியின் வளங்கள் அழிவடைவதுடன், கிராமமும் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் மணல் அகழ்விற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மணல் அகழாது, நில மட்டத்திற்கு கீழாக கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மணல் அகழப்படுவதனால் கடல் நீர் உட்புகுந்து சுமார் 6 அடிக்கு மேல் வெள்ளம் ஏற்படுவதுடன் அப்பகுதி வெள்ளக்காடாக காணப்படுகின்றது.

இதனால், எமது பிரதேசச் சூழல் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இயற்கை அனர்த்தம் ஏற்படுகின்ற போது பாரிய பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு அப்பகுதி மக்களால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், போராட்டங்களை நடாத்திய போதும் அந்த நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்கவில்லை என்பதனால் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறும் மகஜரில் கோரப்பபட்டுள்ளது.

Related Posts