Ad Widget

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் நாட்டின் கல்வி முறைமை மாற்றம்!

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பேணப்பட்டு வரும் தொழில்நுட்ப விஞ்ஞான கல்வி முறைமைகளைப் போன்று எமது நாட்டின் கல்வி முறைமையும் முன்னேற்றத்தை நோக்கி மாற்றமடைந்து செல்கிறது என நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

3_presidents_Awards_of_Scientifc_Publications

விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (31) பத்தரமுல்லை வோர்டேர்ஸ் எச் ஹோட்டலில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் அமைச்சர் பற்றலி சம்பிக ரணவக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி:

நாட்டில் பாரம்பரிய கல்வி முறைமையானது பெரும்பாலான கலைப்பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. கலைத்துறையினையும் பாரம்பரியங்களையுமே மிகவும் கூடுதலாக பாடசாலைகளில் கற்பித்து வந்தனர். அப்போது விஞ்ஞான தொழில்நுட்பம் கற்பிப்பது மிகவும் அரிதாகவே காணப்பட்டது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் விஞ்ஞான பாடமானது டி.ஏ.ராஜபக்ச வித்தியாலயத்தில் மட்டுமே ஆரம்பத்தில் கற்பிக்கப்பட்டது. மொனராகலை மாவட்டத்தில் மஹானாம வித்தியாலயத்தில் மடடுமே விஞ்ஞானப் பாடம் கற்பிக்கப்பட்டது. அப்போதய காலத்தில் மருத்துவர் பொறியியலாளர் விஞ்ஞானிகள் என பல துறைகளில் கற்க விருப்பம் இருந்தாலும் வசதிகள் காணப்படவில்லை.

அவ்வகையில் தற்போதய சந்ததியான நீங்கள் மிகவும் அதிஸ்டசாலிகள். உங்களுடைய இலட்சியம் என்னவோ அதை நீங்கள் இலகுவாக அடைய முடியும். உங்களுடைய ஆராய்ச்சிகள் எமது நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவில் வெளியிடக்கூடியளவில் தாங்கள் சர்வதேசத்தில் ஒருவராக அங்கம் வகிக்க முடியும்.

அண்மையில் நான் திருகோணமலை நகரின் பதவியா பிரதேசத்திற்கு விஜயம் செய்தேன். அங்குள்ள பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் மஹிந்தோதய கல்விக்கூடத்தில் கொண்டுள்ள ஆர்வத்தினையும் விருப்பத்தினையும் கண்டு மிகவும் சந்தோசமும் ப+ரிப்பும் அடைந்தேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளின் அமைச்சின் செயலாளர் திருமதி தாரா விஜேயதிலக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் எச்.ஜனக எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts