Ad Widget

அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட இந்தியக் குழு

indian_visit-03யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று யாழிலுள்ள இந்திய வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது.

யாழில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணி, பலாலி விமான ஓடபாதை புனரமைப்பு, யாழிலுள்ள இந்திய வீட்டுத்திட்டம், குருநகரில் அமைந்துள்ள இந்திய- இலங்கை நட்புறவு வலைத் தொழிற்சாலை மற்றும் யாழ்.நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.

யாழிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் வே. மகாலிங்கம் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இவர்களிக்கான விஜயத்தின் போது யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம், யாழ்.மாநகர முதல்வர் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த குழுவில் நாடளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும் பிரகா ஜவதேகர ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts