கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை , இராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் புதன்கிழமை (15) கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்று இருந்தனர்.
கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை படகின் இயந்திரத்திற்கான எரிபொருள் தீர்ந்தமையால், படகு காற்றின் திசையில் அனலைதீவு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
அது தொடரில் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , மூவரையும் மீட்ட பொலிஸார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.