Ad Widget

அனந்தி தலமையில் விழா!, விழாவைப்புறக்கணித்த இராணுவ,பொலிஸ் அதிகாரிகள்!

ananthyவடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்குபற்றிய பொது நிகழ்வொன்றில் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுக்க மறுத்திருந்த சம்பவமொன்று அராலி மாவத்தை பகுதியில் நேற்று நடைபெற்றுள்ளது.

வடக்கு,கிழக்கில் பொது நிகழ்வுகளில் அப்பகுதி படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைக்க வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.

அவ்வகையில் அராலி மாவத்தை குதியில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அழைக்கப்பட்டுள்ளார். அதே போன்று அப்பகுதி படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கெடுக்கும் நிகழ்வில் தாம் பங்கெடுக்க தயாரில்லையென தெரிவித்துள்ள படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அவரே தமக்கு தற்போது எதிரியென தெரிவித்துள்ளதுடன், தமக்கு எதிராக அவர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரை அழைக்காது விட்டால் தாம் வருகை தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் அதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுதலித்து அனந்தி தலைமையில் நிகழ்வினை நடத்தி முடித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

Related Posts