Ad Widget

அதிக முதலீடு செய்வதற்கான வழிகளை ஊடகங்கள் செய்வதில்லை – டக்ளஸ்

மக்கள் அதிக முதலீடு செய்வதற்கான வழிகளை ஊடகங்கள் செய்வதில்லை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (03) தெரிவித்தார்.

semi5

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் முதலீட்டு ஊக்குவிப்பு கருத்தரங்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

ஊடகங்கள் தவறான வழிநடத்தல்களை மேற்கொள்கின்றன. பக்கச்சார்பாகவே செயற்படுகின்றன. அபிவிருத்தி தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதில் ஊடகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் அவற்றின் தன்மை என்பவை தொடர்பான விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில்லை.

மாற்றுக்கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

தவறான வழிநடத்தல்கள் மூலம் தான் கடந்த 30 வருட கால யுத்தகாலத்தில் பொருளாதார முதலீடு குறைவாக காணப்பட்டது. ஆனால் தற்போது பெரிய அளவில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றி அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் மீண்டும் ஜனாதிபதியானால் பல மடங்கு முதலீடுகள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

கைத்தொழில் பேட்டையை மேலும் அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசியுள்ளேன். இந்த கைத்தொழில்பேட்டை தொடர்பான செய்திகள் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதனை மேம்படுத்தி பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Posts