Ad Widget

அதிகாலையில் ஏற்ப்படும் மின்சாரத் தடைக்கு காரணம் மின் கம்பிகளில் படியும் தூசி!

powercutமின் கம்பிகளில் நாளாந்தம் படியும் தூசிகள் ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. இதனால் தான் அதிகாலை வேளை களில் மின்சாரம் தடைப்படுகிறது” இவ்வாறு கூறுகிறார் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் பிரதேச மின்பொறியியலாளர் ஒருவர்.

யாழ்.குடாநாட்டில் நகரப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அதிகாலை வேளைகளில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் 7 மணிவரை இந்த மின்தடை தொடர்கின்றது. கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக “அறிவிக்கப்படாத’ இந்த மின் தடை தடையின்றி தொடர்ந்து வருகிறது. இது பற்றி இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் பிரதேச மின்பொறியியலாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்

”தற்போது பெரும்பாலான மின் கம்பிகளில் தூசி படிந்துள்ளது. அதே சமயம் அதிகாலை வேளைகளில் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அதிகரிக்கிறது. அதன் காரணமாக மின் ஒழுக்கு ஏற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத நிகழ்வு.

மின் ஒழுக்கு ஏற்படுவதனால், மின் பிறப்பாக்கிகளிலிருந்து திடீரென அதிகூடிய வலுக்கொண்ட மின்சாரம் ஒரே சமயத்தில் வெளிப்பாச்சுகின்றது. இதனால் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்து விடுகின்றன. இதுதான் மின்சாரம் தடைப்படுவதற்குக் காரணம்” என அவர் தெரிவித்தார்.

அடிக்கடி மழை பெய்தால் வயர்களிலுள்ள தூசிகள் கழுவப்பட்டுவிடும். மழை பெய்யாததாலேயே இந்த நிலைமை. இதனால் நாம் மின் கம்பிகளில் படிந்துள்ள தூசிகளை கழுவி அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று மெலும் அவர் கூறினார்.

Related Posts