Ad Widget

அஞ்சல் ஊழியர் போராட்ட நிறைவு

தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை அஞ்சல் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமது நியாயமான பதில் கிட்டியதாக தொற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அஞ்சல் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தாக்கம் செலுத்தும் 6ஃ2006 சுற்றுநிரூபத்தின் பரிந்துரைக்கள் அதன்படியே முன்வைக்கப்படும் எனவும், அந்தவிடயம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக காரியவசம் தெரிவித்தார்.

உத்தேச காலி – கோட்டை, கண்டி, நுவரெலியா அஞ்சல் நிலையங்கள் சுவீகரிக்கப்படும் விடயம் தொடர்பில் தொழிற்சங்க சம்மேளனங்களுடன் கலந்துரையாடி இருதரப்பு இணக்கப்பாட்டுடன் இறுதி தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts