அச்சுவேலியில் நிலம் கீழிறங்குவதை ஆய்வு செய்ய தீர்மானம்

அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் கீழிறங்குதல் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் காணப்படும் நிலப்பிரதேசமானது நிலத்தை விட கீழிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பிலான காரணங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும், குறித்த நிலப்பகுதியை எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மூலம் ஆய்வினை மேற்கொள்வதற்கு, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts