Ad Widget

அங்கவீனமுற்ற படைவீரர்கள் யாழ் விஜயம்

இலங்கை இராணுவத்தினரினால் நிர்வகிக்கப்படும் ஆரோக்கிய பராமரிப்பு விடுதியில் தங்கியுள்ள அங்கவீனமுற்ற படைவீரர்கள் யாழ்பானத்திற்கான சுற்றுலா ஒன்றினை அண்மையில் (12) மேற்கொண்டனர்.

army

இச்சுற்றுபயணத்தில் ஓய்வு விடுதியில் பராமரிப்பு பெற்று வரும் முப்பது அங்கத்தவர்கள் பங்குபற்றிய அதேவளை அவர்களோடு இணைந்து மருத்துவர்கள், தாதி, உடற்பயிற்சி மருத்துவர் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட 16 பேர்களைக் கொண்ட மருத்துவ குழுவொன்றும் சென்றது.

மேற்படி சுற்றுலாவிற்காக 46 இருக்கைகள் கொண்ட விமானம் ஒன்று இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்து தரப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூன்று நாட்களைக் கொண்ட இச் சுற்றுலாப் பயணத்தில் நல்லூர் கோவில், யாழ்ப்பாணக் கோட்டை, தம்பகோளப்பட்டணம், நாகதீப விகாரை மற்றும் ஆனையிறவில் அமைந்துள்ள படைவீரர் நினைவுத்தூபி உள்ளிட்ட பல இடங்களை சுற்றிப்பார்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அங்கவீனமுற்ற படைவீரர்கள் அபிமன்சல I, II, III, ராகம ரணவிரு செவன, மற்றும் அத்திட்டிய மிஹிந்து செத் மெதுற ஆகியன இராணுவத்தினரினால் பராமரிக்கப்பட்டுவரும் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களில் தங்கியுள்ளனர்.

மேலும் சுமார் 300 தொடக்கம் 400 வரையிலான அங்கவீனமுற்ற படைவீரர்கள் இச்சிகிச்சைமுறை மையங்களில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற்றுவருகின்றனர். மேற்படி சுற்றுலா நாகதீப விகாரையில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள விஷேட மத அனுச்டானங்களுடன் வழிபாடுகளுடன் நிறைவுபெறவுள்ளது.

Related Posts