Ad Widget

அங்கஜனின் தந்தை வைத்தியசாலையில்

ramanathan14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தையான ராமநாதன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் சாவக்கச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

அங்கஜன் இராமநாதனின் தந்தை 14 நாள் விளக்கமறியலில்

Related Posts