Ad Widget

அங்கஜனால் மட்டுமே உங்கள் வாழ்வதார மேம்பாடு சாத்தியம் – பசில் குத்தா

மூளாய் வேரம்பு காளி கோயில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை யாழ் மாவட்ட ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனால் நாட்டி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகண அமைச்சர் பசில் குப்தா அவர்கள் “ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியில் யாழ் மாவட்ட அமைப்பளராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சிக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்கின்றார். அங்கஜன் இராமநாதன். இவரால் மட்டுமே உங்கள் வாழ்வதார மேம்பாடு சாத்தியம்” என தெரிவித்தார்

நேற்று காலை 10 மணியளவில் மூளாய் பிரதேச வேரம்பு காளி கோயிலிற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது. இதில் யாழ் மாவட்ட ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் மற்றும் கிழக்கு மாகண அமைச்சர் பசில் குப்தா ஆகியோர் கலந்து கொண்டானர் இதில் உரையாற்றிய கிழக்கு மாகண அமைச்சர் பசில் குத்தா

அபிவிருத்தி என்கின்ற விடயம் உண்மையில் ஆளும் கட்சியிடம் மட்டும் தான் உள்ளது. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே அவ்வாறுதான் இருக்கின்றது இது எற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

மேலும் ஜக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சிக்கு எதுவும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் எதுவும் இல்லை. மாறாக ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் ஜக்கிய தேசிய கட்சிக்கு எதுவும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் எதுவும் இல்லை. இநத உண்மையினை இரண்டிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதுவும் வரப் போவதில்லை என்பதே உண்மை.

எமது கடந்த கால அரசியல் போரட்டங்களில் முதலில் முதியவர்கள் கையில் எடுத்தனர் உரிமை வேண்டும் என்று பேசினார்கள். பின்பு அது இயலாது போக இளைஞர்கள் கையில் எடுத்தானர் ஆயுதம் மூலமான போரட்டத்தை ஏந்திய போது அதுவும் பலனற்று போனது. இப்பொழுது மீண்டும் முதியவர்கள் வந்துள்ளனர். ஆனால் பழைய அரசியல் போரட்டத்திற்கு முன்பு சாத்தியமாகதது இப்பொழுது மட்டும் சாத்தியமாக போகின்றதா. இப்பொழுது எம் மக்களுக்கு வேண்டியது நிம்மதி அமைதியான வாழ்க்கை அதற்கு இணைந்து போக வேண்டும்.

ஆட்சியயைப் பெற்றுத் தருவோம் என்று சொன்னவர்கள் பின் 30 வருடமாக சென்றோம் அவர்கள் பெற்று தரவில்லை. இப்பொழுது மீண்டும் வந்துள்ளானர் பெற்றுத் தருவோம் என்று கூறினால் எப்படி நம்ப முடியும். யதார்த்தத்தை உணர வேண்டும் எம் மக்கள்.

தமிழர் பாரம்பாரியம் கல்வி திண்ணைப்பள்ளிக்கூடமாக மாற்றியது இலவசமாக வழங்கியது இன்று பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து விட்டன இது மாற வேண்டும். கல்வியை உயர்த்த வேண்டும். எவ்வளவு பின்னடைவுகளை கண்டு விட்டது தமிழர் சமுதாயம் இனியும் பின்னடைவை காண வேண்டுமா?

உண்மையயில் எமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தங்கள் சுய நோக்கத்திற்காக தங்கள் கட்சியின் ஸ்திர தன்மை பேணாமல் அலைந்து திரிவது கண்கூடு. ஆனால் இன்று வரை ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியில் யாழ் மாவட்ட அமைப்பளராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சிக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்கின்றார். அங்கஜன் இராமநாதன். இவரால் மட்டுமே உங்கள் வாழ்வதார மேம்பாடு சாத்தியம் எனக் கூறினார்.

angajan-vaddukoddai (6)

angajan-vaddukoddai (7)

angajan-vaddukoddai (4)

angajan-vaddukoddai (3)

angajan-vaddukoddai (5)

angajan-vaddukoddai (2)

angajan-vaddukoddai (1)

Related Posts