Ad Widget

அகதிகள் வழக்கு மீண்டும் அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றில்

aust-falgஅவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கை அகதிகள் தொடர்பான வழக்கு இன்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர்கள் தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த போது, 72 மணித்தியால முன்னறிவிப்பு வழங்கப்படாமல் அவர்களை நாடுகடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது குறித்த அகதிகள் கப்பல் ஒன்றில் காற்றுப் புகமுடியாதவாறு அமைக்கப்பட்டுள்ள சிறிய அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பிரதேசம் இரகசியமானதாக பேணப்படுகிறது.

அத்துடன் அவர்கள் இலங்கைக்கு மீண்டும் நாடுகடத்தப்படவோ அல்லது நவுரு மற்றும் பப்புவா நியுகினி ஆகிய நாடுகளுக்கு மாற்றவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை எதிர்த்து குறித்த அகதிகளின் சட்டத்தரணிகள் தொடர்ந்துள்ள வழக்கு மீண்டும் அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts