யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வாள்கள், மற்றும் கைக்கோடாரிகளுடன் இளைஞர் குழுவொன்று, ஞாயிற்றுக்கிழமை (25) இரவு நடமாடியுள்ளனர்.
சந்தியிலுள்ள மதுபான நிலையத்துக்கு முன்பாக இந்த இளைஞர் குழு நடமாடியதையடுத்து, அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தை சேர்ந்த வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டுச் சென்றனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவ்விடத்துக்கு கோப்பாய் பொலிஸார் வந்தவேளையில், இளைஞர் குழு தப்பித்துச் சென்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் வாள்களுடன் இளைஞர்கள் குழு நடமாடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுவதுடன், இது தொடர்பில் அண்மையில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் ஊடகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.