ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!வேட்பாளர்களும் வழிபாட்டில்!

யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வடமராட்சியிலுள்ள வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு பேசப்பட்ட வேட்பாளர்களும் தளபதியுடன் நெருக்கமாக நின்று வாழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர் என தெரியவந்துள்ளது.

இதன்போது வெற்றிலையில் போட்டியிடும் வேட்பாளர்களான அகிலன், சர்வா ஆகிய இருவருமே வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிபாட்டில் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியதால் வேட்பாளர்கள் சிலரை இராணுவம் ஆதரிக்கின்றது என்ற குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.